13 பேர் மீது ஏறி இறங்கிய பஸ்.. 4 பேர் பரிதாப பலி

மும்பை பாண்டுப் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் பெஸ்ட் பேருந்து பின்னோக்கி சென்றபோது 13 பேர் மீது ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் 3 பெண்கள், 1 ஆண் என 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்; சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்கு காரணமான ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி