ஈரானில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 11 பேர் பலி

ஈரானின் மத்திய மார்க்காஜி மாகாணத்தில் சவே-ஹமீதன் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 24 பேர் படுகாயமடைந்தனர். ஓட்டுநருக்கு ஏற்பட்ட சோர்வு மற்றும் தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணம் எனப் போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மதிக்காதது மற்றும் அவசரகால சேவை பற்றாக்குறையால், ஈரானில் ஆண்டுக்கு 17,000 பேர் விபத்துகளில் உயிரிழப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕