திருவாரூர் அருகே திருநெய்பேர் கிராமத்தில் வாய்க்காலில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று (மே 23) காலை திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர் கோயிலுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஸ்டியரிங் உடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. உடனே பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
நன்றி: சன் செய்திகள்