டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்துக் கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசுக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனு தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.