கராச்சியில் சிலிண்டர் வெடித்ததில் கட்டிடம் இடிந்து விபத்து: 16 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்த விபத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என காவல்துறை அதிகாரி ரிஸ்வான் பட்டேல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி