2026-2027ஆம் ஆண்டுகான திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். இதில் பள்ளிக்கல்வித்துறை, மின்சாரத்துறை, வீட்டுவசதித்துறை, மகளிர் நலன் உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார். ரூ.2,500 மகளிர் தொகை, இலவச பஸ் பயண திட்ட அறிவிப்புகள் இடம்பெறவில்லை. காலை 10 மணி முதல் சுமார் 2.30 மணி நேரம் தொடர்ச்சியாக பட்ஜெட் உரையை வாசித்தார். பொது பட்ஜெட் இன்று நிறைவடைந்த நிலையில், நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.