அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், புதிதாக சிம் கார்டு வாங்குபவர்களுக்காக ‘Freedom 2.0’ என்ற அதிரடி ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி வெறும் ஒரு ரூபாய்க்கு இலவச சிம், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் நாள்தோறும் 1 ஜிபி அதிவேக டேட்டா ஆகியவை வழங்கப்படுகின்றன. நவம்பர் 11 முதல் பிப்ரவரி 8 வரை அமலில் இருக்கும் இந்தச் சிறப்பான சலுகை, புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.