தூத்துக்குடி: தெர்மல் நகர் அருகே கஞ்சா போதையில் தங்கள் வீட்டில் ரகளை செய்தவர்களை தட்டிக்கேட்ட அருள்ராஜ் (31) என்ற பார்வையற்றவர் 3 நாட்களுக்கு முன் கடத்தப்பட்டார். இந்நிலையில், இன்று ஆக.01 அருள்ராஜ் மற்றும் அவரது அண்ணன் மாரி பாண்டியனின் புதைக்கப்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த இரட்டைக் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.