உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சியில், டீ குடிக்க தூக்கத்திலிருந்து எழுப்பியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைய சகோதரர் முசரிப் பேக், மூத்த சகோதரர் தாரிக் பேக்கை கோடரியால் வெட்டி கொலை செய்தார். பின்னர் உடலை வீட்டின் முற்றத்தில் 6 அடி பள்ளம் தோண்டி புதைத்துள்ளார். பின்னர் தனது சகோதரர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் முசரிபிடம் விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார்.