திறப்பதற்கு முன்னரே இடிந்து விழுந்த பாலம் (வீடியோ)

பீகார் மாநிலத்தில் அராரியா மாவட்டத்தில், பக்ரா நதியின் குறுக்கே ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்தது. தரமற்ற கட்டுமானமே, பாலம் இடிந்து விழ காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பீகாரில், நிதீஷ் குமார் தலைமையில் பாஜக கூட்டணி அரசை நடத்தி வருகிறது. ஏற்கனவே, 2020 ஆம் ஆண்டு அதே இடத்தில் கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி