உத்தரப் பிரதேசத்தில் பாலம் இடிந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில், பெட்வா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் கான்கிரீட் பகுதி சூறாவளிக் காற்று மற்றும் கனமழையால் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் பணியிலிருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசாரும், மீட்புப் படையினரும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி