பாலம் இடிந்து விபத்து..4 பேர் பலி, 6 பேர் படுகாயம்

தென் கொரியாவில் கட்டுமானப்பணியின் போது பாலம் இடிந்து விழுந்து 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தென் கொரியா தலைநகர் சியோலில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தைத் தாங்கி நின்ற 164.04 அடி உயரம் கொண்ட ஐந்து தூண்கள் திடீரென இடிந்து கீழே விழுந்தன. இதில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி