திருமணத்தன்று எஸ்கேப்பான மணமகள்.. 40 வயது மணமகன் குமுறல்

உ.பி: கோரக்பூரில் திருமணத்தின்போது கழிவறை சென்று வருகிறேன் எனக்கூறிவிட்டு நகை, பணத்துடன் மணமகள் தப்பியோடியுள்ளார். இதனால் திருமண செலவுகள் அனைத்தும் வீணாகிவிட்டதாக 40 வயது மணமகன் புலம்பியுள்ளார். முதல் மனைவியை இழந்த கமலேஷ் என்ற விவசாயி, ஏஜெண்ட் மூலம் மறுமணத்திற்கு பெண் தேடியுள்ளார். கோயிலில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த வேளையில் இது நடந்ததாக கமலேஷ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி