திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற வேண்டுதலுடன் ஆந்திர மாநில பக்தர்கள் சிலர் கோயிலின் ஒரு பகுதியில் செங்கற்களை அடுக்கி வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இதை பார்த்த மற்ற பக்தர்களும் அதேபோல் செங்கற்களை அடுக்க தொடங்கியதால், கோயில் வளாகம் முழுவதும் செங்கல் குவியல்கள் அதிகரித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் இட நெருக்கடியை கருத்தில்கொண்டு பணியாளர்கள் மூலம் செங்கற்களை அங்கிருந்து அகற்றினர்.
நன்றி:PT