திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செங்கல் சூளை மேஸ்திரியான திருமுகம் (50) என்பவர், நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்களால் மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திருமுகம் உயிரிழந்ததை உறுதி செய்த பின்னரே அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இக்கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் பின்னணியா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: பாலிமர்