BREAKING: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடியில் இன்று (ஜுலை 30) ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் நூற்றுக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். ஏராளமானோர் உயிருடன் மண்ணில் புதைந்துள்ளதாக தெரிகிறது. SDRF மற்றும் NDRF குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கனமழை பெய்து வருவதால் நிவாரணப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி