தெலுங்கானா பள்ளி மாணவர்களுக்கு காலை உணவில் போண்டா, தோசை, பூரி

தெலுங்கானாவில் இடைநிலை மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். போண்டா, தோசை, பூரி, சிறுதானிய இட்லி, உப்புமா உள்ளிட்டவை அடங்கிய உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அரசு ஆண்டுதோறும் ரூ.120 கோடி செலவிடும். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 1.92 லட்சம் இடைநிலை மாணவர்கள் பயனடைவார்கள். இதுவரை பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தெலுங்கானாவில் காலை உணவையும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி