பருவமழை காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவது சகஜம் தான். ஆனால் 48 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல் நீடித்தாலோ அல்லது காய்ச்சலுடன் வாந்தி, பேதி, இருமும்போது மூச்சு வாங்குவது ஆகிய அறிகுறிகள் மூளை காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணமாக்கி விடலாம். இது முற்றினால் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். எனவே நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.