மதுபோதையில் இளைஞரை கொலை செய்து வீடியோ எடுத்த சிறுவர்கள்

சேலம் மாவட்டம் மணியனூர் அருகே, 10 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனும் இணைந்து, கோகுல் (19) என்பவருடன் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிகரெட் பிடித்ததை வீட்டில் தெரிவித்த விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுவர்கள் கோகுலை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்திற்குப் பிறகு வீடியோ எடுத்தும் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. தப்பியோட முயன்ற சிறுவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி