ஹரியானாவின் குருகிராமில் திரிபுராவைச் சேர்ந்த 19 வயது மாணவி, டேட்டிங் செயலி மூலம் பழக்கமான டெல்லியை சேர்ந்த இளைஞர் சிவமுடன் லிவ்-இன் உறவில் வசித்து வந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சிவம் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கி, அந்தரங்க உறுப்பில் சானிடைசரை ஊற்றி தீவைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.