ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட கனமழை காரணமாக ரஜோரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஆற்றை கடக்க முயன்ற சிறுவன் சிக்கி கொண்டான். இதையடுத்து, ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு ஆற்றின் நடுவே சிக்கிய அந்த சிறுவனை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர், சிறுவனுக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன. சிறுவனை துரிதமாக காப்பாற்றிய ராணுவத்திற்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.