டெல்லியில் வீட்டின் முன் கையில் வைத்து பட்டாசு வெடித்த ரிஷி (10) என்ற சிறுவன், எதிர்பாராதவிதமாக பட்டாசு கையிலேயே வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பட்டாசு வெடித்ததில் சிறுவனின் மார்பு பகுதியில் பலத்த படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.