சென்னை: தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பவுன்சர்கள் இருந்தது தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பவுன்சர்கள் தவெக தொண்டர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளை அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இதனால், பவுன்சர்களை பயன்படுத்துவதை குறைத்து, தன்னார்வலர்கள் அணியை உருவாக்க கருத்து எழுந்தது. அதற்கேற்ப விஜய்யும் தொண்டர் அணியை அறிவித்தார். இந்நிலையில், இன்று (நவ.5) தவெக கூட்டத்தில் பவுன்சர்களைப் பார்த்த தொண்டர்கள் கோபத்தின் உச்சத்திற்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.