கள்ளக்குறிச்சி மற்றும் துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். பிகில் ஆட்சியில் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை. கோரிக்கை மனுவுடன் சென்றவரை துணை சபாநாயகரான துறையூர் எம்எல்ஏ தாக்கியுள்ளார். இவர்கள் இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.