பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய தொடர் அமளியால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஆகஸ்ட் 10-ம் தேதி திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு பேச்சுவார்த்தை நடத்தியும் அமளி நீடித்தது. இதனிடையே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.