பாடலீஸ்வரர் கோயிலில் எல்லைக்கட்டுத் திருவிழா.. தீப்பந்தங்கள் ஏந்திய இளைஞர்கள்

கடலுார் மாவட்டம் பாடலீஸ்வரர் கோயில் வைகாசிப் பெருவிழாவை முன்னிட்டு எல்லை கட்டுதல் உற்சவம் நடந்தது. இதில், பக்தர்கள் தீப்பந்தங்கள், ஆயுதங்கள் ஏந்திச் சென்றனர். நேற்றிரவு பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் உற்சவம் நடந்தது. வரும் 22ஆம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தினமும் வீதியுலா நடக்கிறது. வரும், 26ஆம் தேதி இரவு தெருவடைச்சான் உற்சவம், 30ஆம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம், 2ஆம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி