வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: குமுதம்