சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, பசுமை வழிச்சாலையில் உள்ள பழனிசாமியின் வீட்டில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சோதனையானது நடைபெற்று வருகிறது. சமீக காலமாக அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததுகொண்டே இருக்கிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.