சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவலை அடுத்து போலீசார் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. சமீப நாட்களாக தமிழக சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தினமும் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தந்தி