ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: டெல்லியில் பரபரப்பு

கனடாவின் டொரண்டோவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர்கள் டெல்லி காவல்துறைக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறங்கியதும், பயணிகள் வெளியேற்றப்பட்டு விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கண்டறியப்படாததால், மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி