ஹரியாணாவின் அம்பாலாவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹரியாணா மாநிலம், அம்பாலா மாவட்ட நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் இன்று (பிப்., 06) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மிரட்டலைத் தொடர்ந்து, மோப்ப நாய்கள், வெடிகுண்டு செயலிழப்புப் படைகள் மற்றும் பிற சிறப்புப் பிரிவுகள் உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். அதில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.