சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை டி.ஜி.பி அலுவலக இமெயில் முகவரிக்கு வந்த மிரட்டலை அடுத்து போலீசார் ரம்யா கிருஷ்ணன் வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், அது புரளி என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.