சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர் மிரட்டல் விடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, சோதனை நடத்தினர். கடந்த மாதமும் இந்த அலுவலகத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.