நாடு முழுவதும் சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் சூழலில், தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல் மூலம் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபுவின் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, அமைச்சர்கள் வீட்டில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.