டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் நேற்று (நவ., 10) நடந்த குண்டு வெடிப்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 கார் காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சேர்ந்த தாரிக் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த காரின் முன்னாள் உரிமையாளர் சல்மானிடம் போலீஸ் விசாரணை நடக்கிறது. இந்த காரின் உரிமை பலரிடம் கை மாறி இருப்பது ஆர்டிஓ அலுவலக பதிவுகளின் மூலம் அம்பலமாகியுள்ளது.