மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து மும்பை சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது. பிக்கு சௌக் பகுதியில் உள்ள மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்குர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.