திருச்சி அருகே இளம்பெண் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரட்டாம்பட்டி பாலத்திற்கு அடியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பெண்ணின் மரணத்திற்கான காரணம் குறித்து புலிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕