அகமதாபாத் விமான விபத்தில் இறந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உடல் கருகி பலியானர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்துவருகிறது. இந்நிலையில், இன்று காலை 11.10 மணிக்கு விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியானதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்தார். ரூபானியின் உடல் விரைவில் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
நன்றி: ANI