திருச்சி மாவட்டம் ஓலையூரில் உயர்மின் கோபுரத்தில் பணியாற்றிய போது மின்சாரம் தாக்கியதில், ஒப்பந்த ஊழியர்கள் கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோர் உயிரிழந்தனர். கலாமணி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த நிலையில், மாணிக்கம் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்நிலையில், கலாமணி என்பவரது உடல் மின்கோபுரத்தில் சிக்கி, தொங்கியபடி இருந்த நிலையில், கிரேன் உதவியுடன் அவரது உடல் மீட்கப்பட்டது.
நன்றி: NewsTamilTV24x7