ஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாலுமி உடலை கப்பல் நிறுவனம் முறையாக பராமரிக்கவில்லை என கப்பல் கேப்டன் குற்றச்சாட்டு. தண்ணீர் பாட்டில்கள் உதவியுடன் உடல் அழுகாமல் பாதுகாத்து வருவதாக வீடியோ வெளியிட்டு முறையீடு செய்யப்பட்டுள்ளது. MT Celestial கப்பலில் 2ஆம் நிலை அலுவலராக பணியாற்றி வந்த நிஷாந்த்(35) ஜூன் 11ல் உயிரிழந்துள்ளார். மத்திய அரசு தலையிட்டு உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க சக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.