அமெரிக்கா: கலிபோர்னியா மாகாணம் தஹொமா பகுதியில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். தஹொ ஏரியில் 10 பேருடன் பயணம் மேற்கொண்ட படகு எதிர்பாராத விதமாக மோசமான வானிலை மற்றும் பலத்த காற்றால் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த நிலையில், உயிருடன் மீட்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.