கங்கை நதியில் கவிழ்ந்த படகு.. 3 பேர் பலி

பீகார்: கதிஹார் மாவட்டத்தில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 உயிரிழந்துள்ளனர். 17 பேருடன் கங்கையில் சென்ற படகு அம்தாபாத் பகுதியில் உள்ள கோலாகாட் அருகே கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதுவரை பத்து பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 4 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி