காங்கோவில் படகுகள் மோதல்: 30 பேர் பலியான சோகம்

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள ஈகுவேடீர் மாகாண பகுதியில் இயந்திரம் பொருத்தப்பட்ட 2 மரப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட பயங்கர விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆற்றில் மூழ்கி மாயமான 20-க்கும் மேற்பட்டோரை கண்டறியும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அதிகப்படியான பயணிகளை ஏற்றி சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕