'காந்தாரா 2' படப்பிடிப்பின்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நடிகரும், இப்படத்தின் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கர்நாடகாவில் மாணி அணைப்பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட நடிகர்கள் நீரில் நீந்தியபடி கரைக்குத் திரும்பி உயிர் பிழைத்தனர். ஏற்கனவே படத்தில் நடித்த 3 நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் படக்குழுவினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.