முதலமைச்சர் விஜய் உடன் BMW நிறுவன MD சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை BMW நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாமஸ் டோஸ் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் BMW குழுமத்தின் தற்போதைய தொழில்துறை செயல்பாடுகள், மின்வாகன உற்பத்தியில் நிறுவனத்தின் முன்னேற்றம் மற்றும் மாநிலத்தில் முதலீடுகளை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தமிழ்நாட்டை மின்வாகன உற்பத்தி மையமாக மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி