தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தின் வெள்ளி கடற்கரை, நாகப்பட்டினம் மாவட்டத்தின் காமேஸ்வரம் கடற்கரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் அரியமான் கடற்கரை ஆகிய 3 கடற்கரைகளுக்கு 2026-27-ம் ஆண்டுக்கான சர்வதேச 'நீலக்கொடி' அங்கீகாரம் முதன்முறையாக கிடைத்துள்ளது. இதனுடன், ஏற்கனவே இந்த அங்கீகாரத்தை பெற்றிருந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் கோவளம் கடற்கரை, தொடர்ந்து 6-வது முறையாக தனது சர்வதேச தரத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.