தற்போதைய காலகட்டத்தில் முறையற்ற வாழ்வியல் முறை, மனஅழுத்தம் மற்றும் துரித உணவுகளின் நுகர்வால் இளம் வயதிலேயே பலருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆரம்பக்கட்ட அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் விடும்போது, அது பிற்காலத்தில் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற பக்கவிளைவுகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே, சீரான உடற்பயிற்சி, உப்பு பயன்பாட்டைக் குறைத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.