ஜம்மு காஷ்மீர் மசூதியில் குண்டுவெடிப்பு

ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள ராணுவம், காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய கும்பல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சதிச் செயலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி துப்பு துலங்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி