தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ம் தேதி வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகளவில் ரூ.207 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், சூர்யாவின் திரையுலக பயணத்தில் புதிய வசூல் சாதனையை ‘கருப்பு’ பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது.