எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக குழு இன்று சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று (ஜன.09) சந்தித்து பேச உள்ளனர். இதில் அதிமுக-பாஜக இடையிலான முதல்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சந்திப்புக்குப் பிறகு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டு, அதிகாரப்பூர்வ பேச்சு தொடங்கும். பொங்கலுக்குப் பிறகு தொகுதி பங்கீடு விவரங்கள் வெளியாகும் என பாஜக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி